உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு: உலக நாடுகளுக்கும் அழைப்பு..!

இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும்... Read more »

வெளிநாடொன்றில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதிப்பு.

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு... Read more »

ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு…!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன்... Read more »

ரஷ்யாவுக்கு தெரியாமல் அமெரிக்க இராணுவம் கடத்திச்சென்ற விஞ்ஞானிகள்/

ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழில்நுட்பங்களைத் தயாரித்த விஞ்ஞானிகளோ ரஷ்யாவின் கரங்களுக்கு விழுந்து விடும் முன்னர் அவற்றினை கைப்பற்ற அமெரிக்கா துடித்துக்கொண்டிருந்தது. கோல்ட் வார் என அழைக்கப்படும் பனிப்போரின் ஆரம்பத்தன்று இந்த இரகசிய பயணத்தைத் தான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1944ம் ஆண்டு ஜூன் மாதம்... Read more »

உங்கள் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பாதீர்கள்! ரஷ்ய தாய்மாரிடம் கோரும் உக்ரைன் ஜனாதிபதி.

தமது பிள்ளைகளை உக்ரைன் போர்க் களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று ரஷ்ய தாய்மாரிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனிய ஜனாதிபதி வோலாடிமிர் ஸெலன்ஸ்கி தமது பிந்திய காணொளி பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் இருக்கும்... Read more »

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்ய படைகள்!

ரஷ்ய படைகள், கடந்த 24 மணிநேரத்தில், யுக்ரைன் தலைநகர் கிவ்விற்கு 5 கிலோமீற்றர் அருகே நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வடமேற்குப் பகுதியில், தலைநகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து,... Read more »

போரின் புதிய திசையை மாற்றும் ரஷ்யா! உக்ரைனின் பிரதான நகரங்கள் மீது தாக்குதல்…!

கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், போரின் புதிய... Read more »

உக்ரைன் மீதான கொடூர போர்! – ரஷ்யா தொடர்பில் பிரித்தானிய அதிரடி நடவடிக்கை…!

உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. கடந்த மாதம் கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரிக்க வாக்களித்த 386 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக... Read more »

உக்ரைனின் அதிரடி தாக்குதல்கள்! – ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி பலி…!

மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள மூன்றாவது ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி இப்போது உக்ரைனில் கொல்லப்பட்டதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா சுமார் 20 மேஜர் ஜெனரல்களை வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த மாதம் 24ம் திகதி படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்களில்... Read more »

மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு!

உக்ரேனின் மரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக... Read more »