40 நாள் உக்ரைன் போரில், ரஸ்யாவின் இராணுவ இழப்பு அதிகம்- இராணுவ பகுப்பாய்வு தளத்தின் கணிப்பீடு!

உக்ரைன் ஆக்கிரமிப்பு போரின் முதல் 40 நாட்களில் உக்ரைனை விட மூன்று மடங்கு அதிகமான இராணுவ தளபாடங்களை ரஸ்யா இழந்துள்ளது என்று இராணுவ பகுப்பாய்வு தளம் தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட கருவிகளின் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை கோடிட்டு, ஒரிக்ஸ் என்ற இராணுவ பகுப்பாய்வு தளம், ரஸ்யா டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட 2,406 இராணுவ உபகரணங்களை இழந்நதுள்ளதாக தெரிவித்துள்ளது

எனினும் உக்ரைனுக்கு 677 இழப்புகள் மட்டுமே இருந்தன.  இதன்படி உக்ரைனியப் படைகள் இதுவரை போரில் மிகவும் திறம்பட செயல்பட்டதாக ஒரிக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

போர் விமானங்கள் முதல் பீரங்கித் துண்டுகள் மற்றும் கவச வாகனங்கள் என்று ரஸ்யாவின் இழப்புகள் எல்லா இடங்களிலும் கணிசமாக இருப்பதை அவதானிக்கமுடிகிறது.

இருப்பினும், உக்ரைனின் வான்பாதுகாப்புகளை குறிவைப்பதில் ரஸ்யா ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாக ஓரிக்ஸ் கணப்பீடு தெரிவிக்கிறது.

உக்ரைன் 36 வான் பாதுகாப்பு அமைப்புகளை இழந்துவிட்டதாக காட்சி உறுதிப்படுத்தல் உள்ளது,

இது ரஸ்யாவின் எண்ணிக்கையான 42 ஐ விட சற்றே குறைவானதாகும்.

இதேவேளை போரில் அழிக்கப்பட்ட உபகரணங்களின் அளவு, தாம் ஆவணப்படுத்தியதை விட கணிசமான அளவு அதிகமாகவே இருக்கும் என்று ஒரிக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews