மட்டக்களப்பை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்: பொலிஸார் குவிப்பு.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கோஷமெழுப்பியபடி பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்படப் பல முக்கியஸ்தர்கள் மக்களுடன் இணைந்து போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews