அம்பன் கிழக்கில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில்... Read more »

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின்  நிர்ணய  விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன்... Read more »

சிபூ தையலகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஓராம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிபு தையல் பயிற்சி நிலையத்தினரின் இரண்டாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் இயக்குநர் திருமதி சிபுசா நிதர்சன் தலமையில் நேற்று வியாழக்கிழமை 17/10/2024  காலை 10:30 மணியளவில் பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  நோயால் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு ரூபா 260,000 பெறுமதியான  வாழ்வாதார உதவி…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி –  கோணாவில் கிழக்கை சேர்ந்த  இரண்டு சிறுநீரகங்களும்  பாதிக்கப்பட்ட  குடும்பம் ஒன்றிற்க்கு  வாழ்வாதார உதவியாக விவசாயம் மேற்கொள்வதற்க்கு ரூபா 260000/- பெறுமதியான  ஆழ்துளைக்  கிணறு ஒன்று அமைப்பதற்க்கான நிதியுதவி நேற்று வியாழக்கிழமை 10/10/2024 வழங்கப்பட்டதுடன் சுபநேரத்தில்... Read more »

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென உத்தரவு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிகளில்  சட்டவிரோத சுருக்குவலை தொழில்   மீண்டும் தலை தூக்கியுள்ளதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள்... Read more »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்... Read more »

மன்னாரில் மாபெரும் மீனவர் போராட்டத்திற்க்கு அழைப்பு, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு…!

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (23/08/2024) இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இந்திய... Read more »

வடக்கு மாகாண வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்திய ஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த (02/08/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல்... Read more »

சற்றுமுன் கேவில் சந்தியில் இருந்து சட்டவிரோத தொழிலுக்கு சென்றுள்ள படகுகள்-கடற்படை கைது செய்யாத காரணம் என்ன?

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கேவில் சந்தியில் இருந்து சில படகுகள் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளது வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலை தடை செய்ய கோரி போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கடற்படை தொடர்ந்தும் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக இன்றும்... Read more »

சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை-தற்கொலைதான் இனி முடிவென மீனவர்கள் தெரிவிப்பு…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது... Read more »