தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சந்திப்பு துரிதப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி விருப்பத்தோடு இதில் பங்கு பற்றவில்லை. அந்த விருப்பமின்மை அவருடைய பதில்களிலிருந்தும், முகபாவனையிலிருந்தும், நீண்ட இழுத்தடிப்பிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தால் தமிழ்த்;தரப்பு தூர விலகிச் செல்லக்கூடாது என்பதும் சந்திப்புக்கு காரணமாக இருக்கலாம்.
சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களுக்கு கால வரையறை எதனையும் ஜனாதிபதி கூறவில்லை. தெளிவான பதில்களையும் கூறவில்லை. தொடர் பேச்சுவார்த்தைக்கான திகதிகளும் குறிப்பிடப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், ஆக்கிரமிப்பு விடயங்கள் என பல விடயங்கள் பேசப்பட்டன. அரசியல் தீர்வு பற்றியே அதிக நேரம் பேசப்பட்டது. சுமார் 1 1/2 மணி நேரம் நடந்த உரையாடலில் சுமந்திரனே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார். ஏனையவர்களுக்கு சொற்ப நேரங்களே வழங்கப்பட்டன. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளர், உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். சுமந்திரன் அரசியல் தீர்வு பற்றி கருத்துக்களை கூற ரவிகரன், சத்தியலிங்கம், குகதாசன் ஆகியோர் ஆக்கிரமிப்புகள் பற்றிய கருத்துக்களைக் கூறினர். சிறீதரன் பொதுப்படையாக சகல விடயங்களையும் தொட்டு கருத்துக்களைக் கூறினார். ஜனாதிபதி அனைவருடைய கருத்துக்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். முதலில் சிவஞானம் தான் உரையாடினார். அவர் சிங்களத்தில் பேச முற்பட ஜனாதிபதி மூன்று மொழிகளில் எதிலும் பேசலாம் நான் மொழிபெயர்ப்புக் கருவிகளை பொருத்தியுள்ளேன் எனக் கூறியிருந்தார். அந்தக் கருவி வெளிப்படையாக தெரியாத வகையில் பொருத்தப்பட்டிருந்தது. அரசியல் தீர்வு விவகாரம் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையையே மையப்படுத்தியிருந்தது. ஏக்கியராச்சிய தீர்வு யோசனையை கடைசி வரையும் ஏற்க மாட்டோம் எனக் கூறியிருந்த சிவஞானமே அதனைத் தொடக்கி வைத்தார். சுமந்திரனின் கட்டளையை மீறிச் செயற்படும் ஆளுமை அவருக்கு இருக்கவில்லை. சிவஞானம் ஆரம்பத்திலேயே சமஸ்டி என்ற பதம் முக்கியமில்லை. சமஸ்டி முறைமையே முக்கியம் எனக் கூறியிருந்தார், இவ்வாறு கூறும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தார்களோ தெரியவில்லை. தமிழ் மக்கள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. பெயரில்லாமல் உடல் இருந்தால் மட்டும் போதும் என்ற வகையிலேயே அவரது கருத்து இருந்தது. பெயரை மறைத்து வைத்து விட்டால் சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என அவர் கருதுவது போலவே தெரிகின்றது. சிங்கள மக்களை அடி முட்டாள்களாக அவர் நினைத்திருக்கலாம்.
சமஸ்டி ஆட்சி முறையின் அவசியத்தை சிங்கள மக்களுக்கு கூற வேண்டியது சிங்கள அரசியல் சக்திகளின் கடமை என்பதை தெளிவாக வலியுறுத்துவதற்கு பதிலாக பெயர் தேவையில்லை, உடல் தான் முக்கியம் என்கின்ற குறுக்கு வழியில் சிவஞானம் செல்லப் பார்க்கின்றார். தொடர்ந்து “ஏக்;கிய ராச்சிய” தீர்வு யோசனை பற்றி சுமந்திரனே பேசினார்.

சுமந்திரனின் உரையாடல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி வாதங்களை முன் வைப்பது போல இருந்தது. “ஏக்;கிய ராச்சிய” தீர்வு யோசனையில் ஜே.வி.பி உடன்பட்ட விடயங்களையும், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் முன்வைத்தே அவர் உரையாடலை நடாத்தினார். அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம் என அவர் கூறியிருந்;தார். இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதியின் ஒரே பதில் ஜனவரியில் அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை ஆரம்பிக்கலாம் என்பதாகவே இருந்தது.
ஆரம்ப உரையாடலில் கோட்பாட்டு விடயங்களை பேசியிருக்கலாம். திம்பு பேச்சு வார்த்தையின் போது கோட்பாட்டு விடயங்களே முதலில் பேசப்பட்டன. ஜே.வி.பி.யினர் வரித்துக்கொண்ட மாக்சீய சித்தாந்தங்களினூடாகவே கோட்பாடு தொடர்பான உரையாடலை நகர்த்தியிருக்கலாம். அதற்கு மாக்சீய சித்தாந்தம் தொடர்பான ஆழமான புரிதல் சுமந்திரனுக்கு இருக்க வேண்டும். திம்பு பேச்சு வார்த்தையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்கின்ற விடயங்களே பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன.

உண்மையில் இந்தக் கோட்பாட்டு விடயங்களை ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சமஸ்டி தீர்வு நோக்கி நகருவது இலகுவாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி போன்ற வலதுசாரி இயக்கங்களுக்கு இந்த கோட்பாட்டு விடயங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி.யினர் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. இல்லையேல் அவர்களது இடதுசாரி முகமூடி கலைய வேண்டிய சூழலே ஏற்படும்.
அரசியல் தீர்வு என வரும்போது கோட்பாட்டு ரீதியாக தேசிய இன அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப்பொறிமுறை அங்கீகாரம், என்பன மிகவும் முக்கியமானவையாகும். இந்த கோட்பாட்டு விடயங்கள் திம்பு பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்டமையினால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இதன் சில பகுதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கோட்பாட்டு விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் கோட்பாட்டிற்கு செயல் வடிவம்; கொடுக்கும் உள்ளடக்கம் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாம். எடுத்த எடுப்பிலேயே உள்ளடக்கம் பற்றி பேச முற்படுவது ஒருபோதும் வெற்றியைத் தந்து விடாது. இனப் பிரச்சனை என ஒன்று இருக்கின்றது என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற ஒரு கட்சியிடமிருந்து கோட்பாட்டு ஏற்பு இல்லாமல் உள்ளடக்கத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் தரக்கூடியதாக இருக்கும்
“ஏக்கிய ராச்சிய” தீர்வு யோசனை ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனை. கோட்பாடு அடிப்படையில் தமிழ் மக்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை ஏற்றுக் கொள்வது தமிழ் மக்களின் இதுவரை கால அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமையும். தமிழரசுக் கட்சி முதலில் ஒற்றையாட்சி தீர்வை ஏற்றுக் கொள்கின்றதா என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் கட்சியை தமிழரசுக் கட்சி என அழைப்பதை விட “ஏக்கிய ராச்சிய” கட்சி என மக்கள் அழைத்துக் கொள்வர். “ஏக்கிய ராச்சிய” தீர்வு யோசனையில் “கூட்டும் சுயாட்சியும்” என்ற கோட்பாட்டு அம்சம் இருக்காது. இது இல்லாத போது மத்திய அரசு “சிங்கள பௌத்த” அரசாகவே இருக்கும், மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்தத் தீர்வை வழங்கினாலும் அது ஒருபோது நடைமுறைக்கு வரப்போவதில்லை. சோல்பரியாப்பின் 29 ஆவது பிரிவிலிருந்து “தமிழ் மொழி அரச கரும மொழி” ஊடாக 13 வது திருத்தம் வரை தமிழ் மக்களுக்கு இதுவே அனுபவமாக உள்ளது.
புதிய அரசியல் யாப்பில் புதிய அரசியல் தீர்வு என்றால் 13வது திருத்தத்தை யாப்பிலிருந்து அகற்ற வேண்டும். இதனை இந்தியா ஏற்றுக்கொள்ளும் எனக் கூற முடியாது. யாப்பு செயற்பாட்டிலிருந்து இந்திய பிடியை அகற்றுவது தமிழ் மக்களுக்கும் உகந்ததாக இருக்காது. ஏதோ ஒரு வகையில் சர்வதேச அல்லது பிராந்திய பிடி யாப்பில் இருக்க வேண்டும். இதன்னூடாகவே அரசியல் தீர்விற்கு சர்வதேச முகத்தையும் கொடுக்க முடியும். சர்வதேச அல்லது பிராந்திய தலையீடு இல்லாமல் அரசியல் தீர்வுச் செயற்பாடு ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. இந்தியாவிற்கு இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை பாதுகாக்க 13 வது திருத்தம் அவசியம். எனவே “ஏக்;கிய ராச்சிய” தீர்வு யோசனை பற்றி பேசுவதைவிட 13 வது திருத்தத்தை சமஸ்டிக்கு ஏற்றதாக திருத்துதல் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தால் அரசியல் தீர்வுச் செயற்பாடடில் பிராந்தியப்பிடியையும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். இக்கட்டுரையாளர் இருபற்றி தனது முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கின்றார். முழு அரசியல் யாப்பிலும் இரண்டு திருத்தங்களையும், 13வது திருத்தத்தில் 5 திருத்தங்களையும் மேற்கொள்வதன் மூலம் 13 வது திருத்தத்தை சமஸ்டிக்குரியதாக மாற்றலாம். சர்வதேச சக்திகள் இலங்கை தொடர்பாக இந்தியாவைப் பின்பற்றுவதால் இந்தியப் பிடி ஒரு சர்வதேச அங்கீகாரத்தையும் அரசியல் தீர்வுக்கு பெற்றுக் கொள்ள உதவும். இந்தியாவையும் வெட்டி ஓட சுமந்திரன் முற்படுவராயின் அது பகற் கனவாகவே இருக்கும். சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நகர்த்துவதால் இந்தியாவையும் வெட்டி ஓட முயற்சிக்கின்றார். கொழும்பு நடைமுறையில் இந்தியாவை சமாளிக்க முற்படுகின்றதே தவிர கோட்பாடு ரீதியாக இந்தியாவிற்கு எதிரானது ஏனெனில் சிங்கள – பௌத்த தேசியவாதம் இந்திய நலன்களுக்கு எதிரானது.
தமிழரசுக் கட்சியின் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கான எதிர்வினை உடனடியாகவே கஜேந்திரகுமாரிடமிருந்து வந்தது. அவர் இரண்டு விடயங்கள் தொடர்பாக எதிர்க் கருத்துக்களை முன்வைத்தார். ஒன்று “ஏக்;கிய ராச்சிய” தீர்வு யோசனையை அடிப்படையாக வைத்துப் பேசுவது இரண்டாவது அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தமிழரசுக் கட்சி மாத்திரம் முன்னெடுப்பது. இரண்டு கருத்துக்களிலும் நியாயங்கள் இருக்கின்றன. “ஏக்கிய ராச்சிய” தீர்வு யோசனையை அடிப்படையாக வைத்துப் பேசுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என்றும் கூறியிருந்தார் ஏனெனில் “ஏக்;கிய ராச்சியத்திற்கு” தமிழ் மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதே அவரது வாதமாகும். அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையை தேசமாக முன்னெடுப்பது பயன்களைத் தரக்கூடியதாக இருக்கும் என்பது அவரது மற்றைய கருத்தாகும். உண்மையில் தேசமாக முன்னெடுப்பது கூட வெற்றியைத் தராது சர்வதேசம் தழுவிய வகையில் முன்னெடுக்கும் போதே வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். எனவே தற்போதைய தேவை அரசியல் தீர்வுக்காக சர்வதேசம் தழுவிய வகை முன்னெடுக்கக்கூடிய ஒரு பேரியக்கமே. நிலத்தையும், புலத்தையும் தமிழகத்தையும், இணைத்தால் இது ஒன்றும் கடினமாக இருக்கப் போவதில்லை.
தாயகம் வந்து திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் “சமஸ்டித் தீர்வினை இந்தியா வலியுறுத்த வேண்டும்” என இந்திய மத்திய அரசிடம் கேட்டிருக்கின்றார். இவ்வாறு கருத்துக்களைக் கூறுபவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் திருமாவளவன் தாயகம் வந்தபோது அவரை சந்தித்த கருத்துருவாக்கிகள் சமஸ்டி தொடர்பாக இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டிருந்தனர். தமிழரசு கட்சி தனித்து பேசுவது ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் குரலாக அமையாது. அரசியல் தீர்வு விவகாரத்தில் மட்டுமல்ல ஆக்கிரமிப்பு விவகாரங்களில் கூட தேசமாக குரல் கொடுத்தலும், அக்குரலை சர்வதேசம் தழுவிய வகையில் முன்னெடுத்தலும் அவசியம். ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச அரசியல் பாதுகாப்புப் பொறிமுறை இல்லாமல் அதனை ஒருபோதும் நிறுத்த முடியாது. ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசம் தழுவிய உச்சத்தை தொட்ட தமிழ் மக்கள் அரசியல் போராட்டத்திலும் சர்வதேசம் தழுவிய உச்சத்தை காட்ட தயங்கக் கூடாது.
உண்மையில் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளை பல்வேறு படிமுறைகளில் கட்டியெழுப்புவது பயன் தரக்கூடியதாக இருக்கும். முதலில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்குதல் வேண்டும். இது பல்வேறு துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடி மாதிரி அரசியல் தீர்வு ஒன்றைத் தயாரிக்க வேண்டும் தொடர்ந்து இந்த மாதிரி அரசியல் தீர்வை தாயகம் மட்டத்திலும்இ புலம்பெயர் மக்கள் மட்டத்திலும்இ தமிழக மட்டத்திலும் விவாதத்திற்குள்ளாக்கி திருத்தங்களை செய்து இறுதியான ஒரு அரசியல் தீர்வை தயாரிக்க வேண்டும். அதன் பின்னர் இதனை தாயக மட்டத்திலும்இ சர்வதேச மட்டத்திலும் பேசு பொருளாக்க வேண்டும் தொடர்ந்து அதனை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தையை நடாத்தலாம். சமாந்தரமாக சர்வதேச சக்திகளுடனும் உரையாடலாம். இந்த உரையாடல்களினூடாக சர்வதேசத் தலையீடுகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம் சர்வதேச சக்திகளும்இ பிராந்திய சக்தியும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக இருப்பார்களே தவிர சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக நிற்க மாட்டா. சுவிஸ் அரசாங்கம் ஏற்கனவே சமஸ்டி அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை ஆரம்பித்துவிட்டது. தாயகத்திலும் அதனை ஊக்குவித்து வருகின்றது. சட்டத்தரணி குருபரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுமஇ; வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் ஒரு வருடமாக மேற்கொள்ளும் பிரச்சாரமும் சுவிஸ் அரசாங்கத்தின் ஊக்குவிப்புகளே! சுவிஸ் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியிலும் இவ்வாறான ஊக்குவிப்புகளை மேற்கொள்ளுமாறு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் .
ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ரவிகரன், சத்தியலிங்கம், குகதாசன் ஆகியோர் பல்வேறு தகவல்களுடன் கருத்துக்களை முன் வைத்தாலும் ஒரு ஆவணமாக ஜனாதிபதியிடம் கையளித்ததாக தகவல்கள் இல்லை. இது விடயத்தில் புலமைத்தரத்துடன் ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமாகும். ரவிகரன் இந்த விவகாரத்தில் தீவிரமாக உழைப்பதை மெச்சத் தான் வேண்டும். இன்று முல்லைதீவு வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகளை பேசு பொருளாகுவது ரவிகரன் தான். அவர் துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடி ஆவணங்களைத் தயாரிப்பது ஆரோக்கியமாக இருக்கும்.

திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆக்கிரமிப்புகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை என்பதேயே காட்டுகின்றன
இன்றைய தேவை ஆரோக்கியமான நகர்வுகளே!
இன்றைய தேவை ஆரோக்கியமான நகர்வுகளே!