ஐந்து மணி நேர இரகசிய பயணம் – உக்ரைன் ஜனாதிபதியுடன் சிக்கன் சூப் சாப்பிட்ட போரிஸ் ஜோன்சன்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கார், ஹெலிகாப்டர், இராணுவ விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்து, உக்ரைன் தரைநகர் கிவ் நகருக்குச் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் தலைநகருக்குச் செல்லும் G7 நாட்டின் முதல் தலைவராக பிரதமர் ஆனபோது, ​​இந்த பயணத்தின் மேலதிக விவரங்களை டவுனிங் ஸ்ட்ரீட் வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு விஜயம் செய்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைநகர் கிவ்வில் ஐந்து மணி நேரம் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போரிஸ் ஜோன்சன் பல வாரங்களாக கிவ் செல்ல ஆர்வமாக இருந்தார், எனினும் ரஷ்ய துருப்புக்கள் பின்னுக்குத் தள்ளப்படும் வரை பாதுகாப்புக் கவலைகளால் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை மீளவும் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் செய்தி தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த பயணத்தில் அதிக தகவல்களை வெளியிட முடியாது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் கார், ஹெலிகாப்டர், இராணுவ விமானம் மற்றும் ரயிலில் கிவ் சென்று நாடு திரும்பினார். “கிவ் வந்தவுடன், பிரதமரும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் ஒரு மணி நேரம் சந்தித்தனர், இது அவர்கள் இருவருடனான சந்திப்பு. பின்னர் அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு 30 நிமிட நடைப்பயணத்தில் சென்றனர். பின்னர் இரவு உணவின் போது அவர்கள் மேலும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் கிவ்வில் ‘சுமார் ஐந்து மணி நேரம்’ இருந்தார். பிரதமருடன் மிகச் சிறிய குழுவே சென்றிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் புறப்பட்டார். ஒரே இரவில் பயணம் செய்தார், ஞாயிற்றுக்கிழமை காலை மீளவும் பிரித்தானியா திரும்பினார்.பிரதமரின் விஜயம் அவர் போர் வலயத்தை விட்டு வெளியேறும் வரை இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டது.

எனினும், பிரித்தானியாவிற்கான உக்ரைனின் தூதரகம் சனிக்கிழமையன்று பிற்பகல் ட்வீட்டில் தவறாக அறிவித்திருந்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews