வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல்

வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸவரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்,... Read more »

காட்டு யானைகளினால் அச்சுறுத்தலாக உள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தியுள்ளது. அதிகாலை குறித்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. இதேவேளை, குறித்த யானையை துரத்த சென்ற மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன்.... Read more »

நாடாளுமன்றில் எதிர்கட்சியினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்கட்சியினர் 21.02 ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். தேர்தல் இடம்பெற வேண்டுமென கூச்சலிட்டவாறு, பதாகைகளை ஏந்தியபடி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே... Read more »

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி... Read more »

மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  தலைவரிடம் எட்டு மணிநேர விசாரணை -ஏற்பாட்டுக் குழு கண்டணம்.

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் நேற்றைய தினம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் (Counter terrorism investigation division) மாவீரர் நாள் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில்  அழைக்கப்பட்டிருந்தார். இதன் பிரகாரம் காலை 8.30தொடக்கம் மாலை 5.30வரை... Read more »

மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு... Read more »

வீதியில் நின்ற நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கி கொன்ற கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி சிக்கினார்!

வீதியில் நின்றிருந்த நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கோடீஷ்வர வர்த்தகரின் மனைவி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேகநபர் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின்... Read more »

வர்த்தகர் ஒருவரை கடத்தி 7 கோடி ரூபாய் கப்பம் வாங்கிய கும்பல்! வர்த்தகருக்கு மதுபானத்தை பருக்கி வீதியில் எறிந்துவிட்டுச் சென்ற சம்பவம், கடத்தல் குழு சிக்கியது… |

வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் பெறுவதற்கு முயற்சித்த இரு வர்த்தகர்கள் அடங்கிய குழு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வைத்து குறித்த தொழிலதிபரை வேனில் கடத்திச் சென்றவர்கள் ஆரம்பத்தில் தாங்கள் சி.ஐ.டி.யைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய நிலையில் பின்னர் கடத்தப்பட்ட வர்த்தகரின்... Read more »

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது தப்பி ஓடிய கைதி தமிழகத்தில் தஞ்சம்!

மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய கைதி ஒருவர் தமிழகத்தில் தஞ்சமடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிற்காக வவுனியா சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓடியிருந்தார். குறித்த கைதி, நேற்று காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்... Read more »

மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத விடுமுறை – 3000 அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

இந்த ஆண்டுநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று... Read more »