மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத விடுமுறை – 3000 அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

இந்த ஆண்டுநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வேட்புமனு தாக்கல் செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அரச ஊழியர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்திற்குத் திரும்பலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை, நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்கப்பெறாமையினால் முன்னர் உறுதியளித்தப்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews