கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு..

தெஹிவளை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் இன்றையதினம்(27)  14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று(27)  மாலை 5 மணி முதல் நாளை(28) காலை 7 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.... Read more »

தமிழக மீனவப் படகோட்டிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை இரத்து.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவ படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த சமயம் கைது செய்யப்பட்ட தமிழக... Read more »

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும்... Read more »

வடக்கு ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர்  ஒருவர்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை..!

எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த, மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, மசகு எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சுத்திகரிப்பு,... Read more »

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டா வழங்கிய உயர் பதவி! அம்பலப்படுத்திய பொன்சேகா

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என... Read more »

ரஷ்யாவில் கூலிப் படைகளாக செயற்படும் இலங்கையர்கள்…!

இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்காக இந்த நாட்டிலிருந்து பலர்... Read more »

ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் இன்று (26)... Read more »

ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார்.

ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது... Read more »

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் மாயம்!

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த... Read more »