


இதில் இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யம்,
தமிழ் சிவில் சமூக மையம், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், போராளிகளின் நலன்புரிச் சங்கம், அகில இலங்கை, கடற்தொழில் மற்றும் கமத்தொழில் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம், சமூக மாற்றத்திற்க்கான ஊடக மையம், நிமிர்வு” ஊடகமையம், மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்துள்ளன.
கோசங்களாக எமது நிலம் எமக்கு வேண்டும்,
எமது கடல் எமக்கு வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய், தையிட்டி விகாரையை உடன் அகற்று, தொல்பொருட்திணைக்களமா? தொல்லைத்திணைக்களமா, எழுவோம்! எழுவோம்!, விழ, விழ, எழுவோம், இன அழிப்பிற்கு
சர்தேச விசாரணை!, மக்கள் படை வருகிறது கூலிப்படையே வெளியேறு, உயிர்த்தஞாயிறு கொலைகளுக்கு
சர்வதேச விசாரணை, தாயகம்!
தேசியம்!
சுயநிர்ணயம்!, சுயநிர்ணயம்!
எமது பிறப்புரிமை, கூட்டிருப்பை சிதைக்காதே!
கூட்டுரிமையை அழிக்காதே! ஆகிய கோஷங்களை முன்வைத்துள்ளனர்.