பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில்.!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் 01.05.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர்தினப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்கவுரை ஆற்றவுள்ளார்.
சமூக – அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந. ஸ்ரீகாந்தா, சனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதமும் எம் இருப்புக்கான உத்தரவாதமும் ஆகும். உள்ளூராட்சித் தேர்தலில் இவற்றை உறுதி செய்வோம்’ என்ற கருப்பொருளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews