ஈராக்கில் சுட்டு கொலை செய்யப்பட்ட டிக் டொக் பெண் பிரபலம்

ஈராக்கில் உள்ள டிக் டொக் பிரபலமான பெண்ணொருவர் அவரது வீட்டிற்கு அருகில் குறித்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

உந்துருளியில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடி விட்டதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈராக் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews