படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன. ... Read more »
சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,... Read more »
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு... Read more »
விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலே, விவசாய அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் சுமார் 7584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ்.பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்காக வந்து தங்கி இருக்கின்ற மாணவர்களின் வாடகை அறைகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தினால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். எனினும் பின்னர் பல்கலைக்கழகத்தின் ஊடாக விடுதிக்கு விண்ணப்பித்து விடுதியில் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்... Read more »
யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்... Read more »
கடல்வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 19 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.... Read more »
இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து மீனபிடிக்கப்பட்ட ஓர் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இவ்வாறு இலங்கை மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின்... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் நேற்று நேற்றிலிருந்து பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்தம் முகாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகரிக்கலாம்... Read more »