கைது செய்யப்பட்ட 19 போில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்! |

கடல்வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர். 

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 19 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்கள், ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, 

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews