இலங்கை மீன்பிடி படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளது!

இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து மீனபிடிக்கப்பட்ட ஓர் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இதேநேரம் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இலங்கை இந்திய கடற்பரப்பு அதிக கொந்தளிப்பாக இருப்பதனால் படகுகள் திசைமாறிச் சென்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin