
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 நேற்று இறையடி சேர்ந்தார்.
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்று கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று வெள்ளிக்கிழமை நல்லை ஆதீனத்திற்கு எடுத்துவரப்பட்டு மாலை பூரணத்துவ நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று தெரியவருகிறது .