சம்பிக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலே, விவசாய அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ உரம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews