வெள்ளத்தில் சிக்கிய வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிய யாழ்.மாநகர முதல்வர்.. |

யாழ்.பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்காக வந்து தங்கி இருக்கின்ற மாணவர்களின் வாடகை அறைகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தினால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

எனினும் பின்னர் பல்கலைக்கழகத்தின் ஊடாக விடுதிக்கு விண்ணப்பித்து விடுதியில் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்

மற்றும் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். யாழ்.ல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்களினால் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

Recommended For You

About the Author: Editor Elukainews