க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆசிரியர் சங்க செயலாளர் கருத்து!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தீர்மானம் இன்றும் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆசிரியர் சங்க செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.... Read more »

முக்கிய உணவுப்பொருளின் விலையை அதிகரிக்கத் திட்டம்!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளை நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனினும்,... Read more »

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட குழுவினர் இத்தாலி நகரை சென்றடைந்தனர்.

ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான... Read more »

இன்றைய தினம் 1,882 கொரோணா தொற்றாளர்கள்…!

நாடளாவிய ரீதியில் இன்று 1,882 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360ஆக உயர்வடைந்துள்ளது. Read more »

கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று... Read more »

நாகர்கோவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு உதவி….!

வடமராட்சிகிழக்கு நாகர்கோவிலில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது உணவுத் தேவைக்காக கஸ்ரப்படும் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர்ந உணவு பொதிகளை உலக தமிழர் தேசிய பேரவையின் நிதிப்பங்களிப்பில்   நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. Read more »

யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்! 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.காரைநகர் பகுதியில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த சில... Read more »

தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் ஐ.நா அலுவலகத்துக்கு அனுப்பவில்லை!

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட... Read more »

மின்சாரசபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மின் கட்டணத்தை செலுத்தும்படி இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.  இது குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளதாவது, மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால்  மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் மின்சாரசபையின்... Read more »

ஜெனிவா விவகாரத்தில் கட்சி அரசியல் நடாத்தும் தமிழ்க் கட்சிகள்;

சி.அ.யோதிலிங்கம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் எதிர்வரம் 13ம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. அதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆணையாளர் அவற்றையெல்லாம் செவிமடுத்தே வாய்மூல அறிக்கையைத்... Read more »