யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்! 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.காரைநகர் பகுதியில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் பெருமெடுப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் உடனடியாக செயற்பட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தியிருந்ததுடன், பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டிருந்தனர். எனினும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,

தொற்றாளர்கள் திருமண நிகழ்வுடன் தொடர்புபட்டவர்கள் என சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியிருப்பதாக தொியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews