ஜெனிவா விவகாரத்தில் கட்சி அரசியல் நடாத்தும் தமிழ்க் கட்சிகள்;

சி.அ.யோதிலிங்கம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் எதிர்வரம் 13ம்
திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. அதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்
இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கு
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆணையாளர் அவற்றையெல்லாம்
செவிமடுத்தே வாய்மூல அறிக்கையைத் தயாரிப்பார். இது விடயத்தில் தமிழ் தேசியக்
கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஒருங்கிணைந்த அறிக்கையினை
சமர்ப்பிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனித்தனியாகவே
அறிக்கைகள் அனுப்பியுள்ளனர். அதுவும் காலம் பிந்தியே
அனுப்பப்படுகின்றது. ஆணையாளர் வாய்மொழி அறிக்கையை தயாரித்து
முடித்துவிட்டால் இக் கடிதங்கள் பெரிய பயன்களைக் கொடுக்கப் போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 10 பாராளுமன்ற
உறுப்பினர்களின் பெயர்களையும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை
சேனாதிராஜாவின் பெயரையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை
அனுப்பியிருக்கின்றார். விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்
கூட்டணியும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்
வேறு தனித்தனியாக அறிக்கைகளை அனுப்பியுள்ளன. சம்பந்தன் அனுப்பியுள்ள
அறிக்கை தொடர்பாக அதிர்ப்தியுற்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து “தமிழ்த்
தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அமையம்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
அதன் சார்பிலும் அறிக்கை அனுப்பப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன.
இவற்றைவிட அனந்தி சசிதரன் தலைமையிலான ரூடவ்ழத் தமிழர் சுயாட்சிக் கழகமும்
காணாமல் போனோர்க்கான அமைப்புக்களும் தனித்தனியாக அறிக்கைகளை
சமர்ப்பித்துள்ளன.

2 தமிழ்த்தேசியக்கட்சிகள் தனித்தனியாக அறிக்கையினை சமர்ப்பிப்பது தமிழ்
மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த போராட்ட அரசியலை கொச்சைப்படுத்துவதாகவே
அமைந்திருக்கின்றது. தனித்தனியே அறிக்கைகளை சமர்ப்பிப்பது தமிழ் மக்களுக்கு
எந்தவித பேரம் பேசும் பலத்தையும் கொடுக்காது. சர்வதேச சக்திகள் தமிழ் மக்களின்
அபிலாசைகளை புறம் தள்ளுவதற்கே இது வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்.
இன்னோர் பக்கத்தில் தனித்தனியாக அறிக்கைகளை அனுப்பியதன் மூலம்
தமிழ்க்கட்சிகள் தமது ஒற்றுமையின்மையின் சீத்துவத்தை
சர்வதேசமயப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் தாயகத்தில் மட்டும் பேசு
பொருளாகி இருந்த ஒற்றுமையின்மை விவகாரம் இனி சர்வதேச மட்டத்திலும் பேசு
பொருளாகப்போகின்றது.

தமிழ்க்கட்சிகளுக்கு இவ்விவகாரம் தாங்கள் நினைத்தது போல அணுகுவதற்கு
அவர்களின் சொந்தப்பிரச்சினை அல்ல. இது தமிழ் மக்களின் இருப்புச்சார்ந்த
சுயமரியாதைப்பிரச்சினை. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களின் சுய மரியாதை
தமிழ்க்கட்சிகளினாலேயே கேலிக்குள்ளாக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க
முடியாது.

அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் விக்கினேஸ்வரன்
தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணிக்குமிடையில் இணையவழிக்கலந்துரையாடல்
ஒன்று இடம் பெற்றது. அதில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு ஒருங்கிணைந்த
அடிப்படையில் அறிக்கையினை சமர்ப்பிப்பதென்றும் ஐ.நா.மனித உரிமைகள்
பேரவையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்ததையும் அதில்
கூறப்பட்ட எந்த விடயங்களையும் நடைமுறைப்படுத்தாதையும் மாறாக அத்தீர்மானத்திற்கு
எதிராகப் பல செயற்பாடுகளை முன்னெடுப்பதையும்ரூபவ் அரசின் செயற்பாடுகளால்
தமிழ் மக்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளையும் குறிப்பிடுவது என்றும்
தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர்
சுமந்திரனால் தாங்கள் ஒரு அறிக்கை தயாரித்து வருவதாகக் கூறப்பட்டது. அதன்
போது அவற்றையும் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு மாறாக சம்பந்தன் மட்டும் தனித்துக் கையொப்பமிட்டு 10 பாராளுமன்ற
உறுப்பினர்களின் பெயரையும் குறித்து அறிக்கையையினை
அனுப்பியிருக்கின்றார். இது சம்பந்தமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
பங்காளிக் கட்சிகளுடன் எந்தவித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர

3 தமிழரசுக்கட்சிக்குள் கூட இது பற்றிக் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை.
சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து இவ் அறிக்கையினை
அனுப்பியிருக்கிறார்கள். தென்னிலங்கையைச் சேர்ந்த அரசு சார்பற்ற
நிறுவனம் ஒன்று தயாரித்த அறிக்கையே சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் வருகின்றன .
அந்த அறிக்கையில் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றவாளிகள் என்கின்ற
ஏற்பாட்டை தென்னிலங்கை அரசு சார்பற்ற நிறுவனத்தின் அழுத்தம் காரணமாக
சேர்ந்திருக்கின்றனர் என்றும் தெரியவருகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில்
கடும் கோபத்தையும் அதிருப்திகளையும் உருவாக்கியிருக்கிறது. தமிழ்த்தேசிய
அரசியலை இது மோசமாக பலவீனப்படுத்தும் என்ற கருத்தும் வலுவாக
முன்வைக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அளவு கடந்த தியாகங்களுடன்; தமிழ்த்தேசிய
அரசியலின் ஒரு கட்டத்தை நகர்த்தியவர்கள். அவ் அரசியலின் தொடர்ச்சிதான்
இன்று பின்பற்றப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்துவது
தமிழ்த்தேசிய அரசியலையும் மோசமாகப் பலவீனப்படுத்தும். குறிப்பாக தமிழ்த்
தேசிய அரசியலிலுள்ள தமிழ்த் தெசியப் பண்புகளையும் நீக்கம் செய்யும்.
சர்வதேச சக்திகளினதும் பேரினவாத சக்திகளினதும் விருப்பமும் இது தான்.
இவ்விருப்பங்களுக்கு சம்பந்தன் தலைமை துணைபோயுள்ளது.

தவிர புலிகள் ஏற்கனவே பல தண்டனைகளை அனுபவித்துள்ளனர். சரணடைந்த
பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனா.; இடைமட்ட உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு
சிறை வாசத்தின் பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் கைதிகளாக
சிறையில் வாடுகின்றனர்;. இவர்களுடைய நிலையை எந்தவித தண்டனைகளையும் பெற்றுக்
கொள்ளாத படையினருடன் சமப்படுத்திவிட முடியாது. தவிர கடந்த தேர்தலில் பல
மாவீரர்களினதும் போராளிகளினதும் குடும்பங்கள் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளன. அந்த வாக்களித்த மக்களுக்குதண்டனை வாங்கிக்
கொடுப்பதற்கு கூட்டமைப்பினர் துடியாய்த்துடிக்கின்றனரா? என்ற சந்தேகமும்
எழும்பியுள்ளது.

மேலும் இன அழிப்பு ஒன்று இடம் பெற்று இருக்கின்றது
தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது என்பதை சர்வதேச மட்டத்தில் நிரூயஅp;பிக்கும்
போதே சர்வதேச தலையீட்டுடன் கூடிய அரசியல் தீர்வை எம்மால் பெற்றுக் கொள்ள
முடியும். கூட்டமைப்பு தலைமையின் இந்தச் செயல் இந்த நகர்வையும் பலவீனமாக்கியுள்ளது.

4 தமிழ்த்தேசியக் கட்சிகள் தனித்தனியாக அறிக்கைகளை சமர்ப்பிப்பதன்
மூலம் பல்வேறு ஆபத்துக்களை தோற்றுவித்துள்ளனர். இதில் முதலாவது சர்வதேச
சக்திகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை கணக்கெடுக்காத நிலையை இது உருவாக்கும்.
ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தால் சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக
வல்லரசுகளுக்கு வலிமையான நிர்ப்பந்தங்களைக் கொடுத்திருக்கலாம்.

இரண்டாவது இலங்கைத்தீவை மையமாக வைத்து இடம்பெறும் புவிசார் அரசியல்
போட்டியில் தமிழ் மக்கள் கௌரவமான பங்கினைப் பெற்றுக்கொள்ள முடியாத
நிலையை இது உருவாக்கும். உண்மையில் இந்தப்புவிசார் அரசியல் போட்டியில்
தமிழ் மக்களுக்கு கௌரவமான பங்கு இருக்கின்றது. புலிகள் இருந்த காலத்தில் தமிழ்
மக்கள் கௌரவமான பங்காளிகளாக இருந்தனர். தமிழ் மக்களின் நலன்களை
கவனத்திலெடுக்காமல் விட்டு விட்டு எந்த ஒரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது என்ற
நிலை வல்லரசுகளுக்கு இருந்தது. ஆனால் நல்லாட்சிக் காலத்தில் இவ் வல்லரசுகள்
தமிழ் மக்களின் தலைமையை பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு போட்டி
மைதானத்திலிருந்து தமிழ் மக்களை வெளியே தள்ளினர். தங்களுடைய நலன்களை மட்டும்
கவனித்தனர். இன்று அரசியல் சூழல் மாறிவிட்டது. தமிழ் மக்களுக்கு கௌரவமான
பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதையே வரலாறு நிர்பந்தித்துள்ளது. தமிழ்த்தேசிய
எதிர்ப்பு சக்திகளுக்கு இதனைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவை இருக்கின்றது.
அச்சக்திகளுக்கு கூட்டமைப்பினர் துணை போகின்றனர்.
மூன்றாவது பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாத
நிலையே ஏற்படுவதாகும். தற்போது பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமே
ஆட்சியிலுள்ளது. அது தமிழ்த்தேசத்தின் இருப்பைச் சிதைப்பதற்கு பச்சை
ஆக்கிரமிப்புக்களைப் பகிரங்கமாகவே மேற்கொள்கின்றது. குமார்
பொன்னம்பலத்தின் வார்த்தையில் கூறுவதானால் தமிழ் மக்களின் நெஞ்சில் குத்தும்
அணியே ஆட்சியிலிருக்கிறது. அது எந்நேரமும் ஆக்கிரமிப்புக்களை
மேற்கொண்டபடியே இருக்கும். இதற்கு முகம் கொடுப்பதென்றால் ஒருங்கிணைந்த
அரசியல் அவசியமானது தனித்தனியாக செயற்பட்டு இவற்றிற்கு முகம் கொடுக்க
முடியாது.
கோத்தபாய அரசாங்கம் வெளித்தோற்றத்தில் வலிமையானதாக
தோன்றினாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு மிகவும் பயந்தது. அதுவும் உலகளாவிய
சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்கும் அரசியல் போராட்டங்களுக்கு மிகவும்
அஞ்சுகின்றது. தமிழ்த்தரப்பு பொத்துவில் முதல் பொலிகண்டி வரை

5 போராட்டத்திலும் யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுத்தூபி அழிப்பு
போராட்டத்திலும் வெற்றி பெற்றதற்கு உலகளாவிய வகையில் மேற்கொள்ளப்பட்ட
ஒருங்கிணைந்த அரசியல் போராட்டமே காரணமாகும். கூட்டமைப்பின் அணுகு முறை
இந்த ஒருங்கிணைந்த அரசியல் போராட்டங்களை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ஐக்கியம் ஏற்பட்டிருந்தால் அது ஒரு
வலிமையான ஒருங்கிணைந்த குரலை உருவாக்கியிருக்கும். இந்த ஐக்கியத்தை வைத்துக் கொண்டு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் அழுத்தங்களைக் கொடுத்து அதனையும்
இணைத்திருக்கலாம். அந்த நகர்வும் பலவீனமாகியிருக்கின்றது.

தமிழ்த்தேசியக்கட்சிகள் தேர்தல் அரசியல் நடாத்தும் காலம் இதுவல்ல.
இது ஒருங்கிணைந்த அரசியலை நடாத்த வேண்டிய காலம் காலம். தேர்தல் காலத்தில்
இக்கட்சிகள் எதையாவது செய்து கொள்ளட்டும். ஆனால் பேரினவாததுக்கு முகம்
கொடுக்கின்ற போதும் சர்வதேச அரசியலைக் கையாளும் போதும்ரூபவ் ஒருங்கிணைந்த
அரசியல் மிகவும் அவசியம். இவ் ஒருங்கிணைவு கூட தமிழ்த்தேசியக்கட்சிகள் மட்டும்
ஒருங்கிணைவதால் பெரிய பயன்கள் கிடைக்கப்போவதில்லை. பொது அமைப்புக்களையும்
இணைத்து தேசிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதை நோக்கி இந்த
ஒருங்கிணைவு வளருதல் வேண்டும். இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் சிறந்த
சேமிப்புச் சக்திகளாகவுள்ள மலையகத் தமிழர்கள்ரூபவ் தமிழகத் தமிழர்கள் உட்பட உலகம்
வாழ் தமிழக வம்சாவழித் தமிழர்களையும்ரூபவ் தமிழ் மக்களின் நட்புச்சக்திகளாகவுள்ள
சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலக முற்போக்கு ஜனநாயக
சக்திகளையும் ஓர் அணியில் திரட்டி பலமான உலக அணியாக முன்னேறுவதை நோக்கி
இவ் ஒருங்கிணைவு வளர்ச்சி பெற வேண்டும். இவ்வாறான படிநிலை ஒருங்கிணைவு
ஏற்படுமாயின் அதன் பின்னர் எந்த சக்திகளினாலும் தமிழ் மக்களின் அரசியல்
அபிலாசைகளை முறியடிக்க முடியாது.
தமிழ் மக்கள் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன இயலுமோ
இயலாதோ என்ற கேள்விகளுக்கப்பால் வரலாறு இட்ட கட்டளை இவ் ஒருங்கிணைவு அரசியல்
தான்.
தமிழ் மக்கள் சிதைந்து அழிந்து போவதா? சுயமரியாதையுடன் நிலைத்து
வாழ்வதா? என்ற முடிவை உடனடியாக எடுப்பது அவசியம். சுய மரியாதையுடன் நிலைத்து
வாழ்வது என்று தீர்மானித்தால் அதற்கான ஒரே வழியும் ஒருங்கிணைந்த
அரசியல்தான்.

6 கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும் அறிவுத்துறையினர் முதலில் ஒரு
அறிவுத்துறை இயக்கமாக வளர வேண்டும். இன்னோர் பக்கத்தில்
அறிவுத்துறையினரின் அறிவுத் திரட்சியை மக்கள் முன் கொண்டுசெல்வதற்கு
சிவில் சமூகத் தலைவர்களைக் கொண்ட சமூக இயக்கம் வளர வேண்டும். இவை இரண்டும் வளர்ந்து
ஒருங்கிணைவை உருவாக்கினால் ஒருங்கிணைந்த அரசியலுக்கு வருமாறு அரசியல்
கட்சிகளுக்கு வலுவான அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews