கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது அத்தோடு அதனால் ஏற்படுகின்ற கொரோணா மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இந்ந நேரத்தில் நாமும் எமது மக்களும் சமூக பொறுப்புணர்வோடு இந்த கொரோணா தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும்  இப்பொழுது கொரோணா தொற்று அதிகரித்து செல்கின்ற வேளையிலே முதலாவது பிரதானமாக எங்களுடைய மக்கள்  சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அத்தோடு உங்களுக்கு இருமல் தடிமல் காச்சல் தொண்டை நோ போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றபோது ஏனையவர்களிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள் என்றும்  அத்தோடு வைத்திய சாலையினுடைய உதவியை நாட வேண்டும்,  வைத்திய சாலைக்கு  வருவதற்கு எந்தவிதமான தயக்கமும் தேவை இல்லை, எவ்விதமான பயமும் கொள்ளத் தேவை இல்லை, உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் காணப்படின் வைத்திய சாலையின் உதவியை நாடி அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும்  மருத்துவ மனைக்கு வருகின்ற போது எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்கள் கொரோணா பெருந்தொற்று காலத்திலே தொற்றினை தடுப்பதற்க்கும் தொற்றினால் ஏற்படுகின்ற உயிர் இழப்புக்களை தடுப்பதற்க்கும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள், அந்த வேளையிலே உங்களுடைய நோய் வரலாற்று  உண்மை தன்மையை வெளிப்படுத்தி எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்களிடம் அந்த தொற்றினால் ஏற்படுகின்ற அபாயத்தை தவிர்பதிலே நீங்கள் உண்மையிலே பங்களிக்க வேண்டும் என்றும் இவ்வாறு மக்கள் நாம் சமூக பொறுப்புடன்  நடந்து கொள்வோமேயானால் முன்களத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்களுடன்  இணைந்து நாமும் இந்த கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும், கடந்த 16 ம் திகதி மே மாதம் எங்களுடைய பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலே கொவிட் தொற்று சிகிச்சைக்கான விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரையிலே எமது விடுதியில் 556 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
விடுதியிலும் வெளி நோயாளர் பிரிவிலும் சேர்த்து 41 நோயாளர்கள் இதுவரையில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்த மரணங்கள் அகஸ்ட் மாதத்திலேதான் அதிகரித்திருக்கின்றன.
ஆறு உடல்களே வைக்கக்கூடிய வசதியே உள்ளன. ஆனால் தற்போது 11 சடலங்கள் உள்ளன. எனினும் நெருக்கடி நிலைகருதி பன்னிரண்டு சடலங்களை வைத்திருக்க முடியும். மேலதிகமாக இறந்த உடல்கள் வருகின்ற போது கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் மாகாண சுகாதார திணைக்களம் இறந்த உடல்களை மாகாணத்திற்க்கு வெளியிலே கொண்டு சென்று அடக்கம் செய்யும் ஏற்பாடுகளையும் செய்துள்ளதென்றும் .இதே வேளை வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் மரணம் அடையும் கொரோணா தொற்றாளர்களது உடலங்களை கொண்டு செல்வதற்க்கான போக்குவரத்து வசதியினை தியாகி அறக்கொடை நிறுவுனர் திரு தியாகேந்திரன் இன்றிலிருந்து இலவசமாக  பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

 

Recommended For You

About the Author: Editor Elukainews