வன்னி கோப் நிறுவனத்தால் வடமராட்சி திக்கத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு….!

நியூசிலாந்து காந்தி இல்லத்தின் தமழ்நிதியத்தினரால்
வன்னி ஹோப் ( *Vanni Hope Australia)* நிறுவனத்தன் ஏற்பாட்டில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது  வாழ்வாதாரத்தினை இழந்த  குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11:30மணிக்கு திக்கம் பொது மண்டபத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்டவர்குக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா பெருந் தொற்றுப்பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறை காரணமாக  யாழ்ப்பாணம்  வடமராட்சி அல்வாய் மேற்கு கிராமத்தில்   பலர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து மிகவும் துன்பப்படும் நிலையில் உள்ள   தெரிவுசெய்யப்பட்ட  குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 இப்பரதேசத்தில் அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடும் பலநூறு குடும்பங்கள் வசிக்கின்ற போதும் அவர்களிலும் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது
இதில் Usdf நிறுவனத்தால் திக்கம் மாதர் சங்கத்தினரால் வழங்கப்பட்டமை குறிப்பிட தக்கது
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews