முக்கிய உணவுப்பொருளின் விலையை அதிகரிக்கத் திட்டம்!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளை நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும், அரிசி வியாபாரிகளிடம் இருந்து அரிசி கையிருப்புகளை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் கொள்முதல் செய்வதால், அரசு அதன் விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டு நெல் கிலோவுக்கு அதிகபட்சமாக 50 ரூபா மற்றும் சம்பா நெல்லுக்கு 52 ரூபா என அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக விவசாயிகள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews