
தேசிய ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக்கோரி ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது, தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஆசிரிய... Read more »

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் காலை 11 மணியளவில் ஆரம்பமானது. Read more »

பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சோ.சிவநேசன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக திணைக்கள உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பளை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது. விருந்தினர்கள்... Read more »

வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாகாணமட்ட போட்டிகள் இன்று ஆரம்பமானது. குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி உள்ளக விளையாட்ரங்கில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழவில், மாகாண பூப்பந்தாட்ட சம்மேள தலைவர், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, மாவட்ட செயலக... Read more »

மணற்காடு புனித அந்தோனியார் ஆலய பங்கு மக்கள் பெருமையுடன் வழங்கும் கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சித்தரிக்கும் தவக்கால ஆற்றுகை பலிக்களம் திருப்பாடுகளின் காட்சியானது எதிர்வரும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இந்த திருப்பாடுகளின்... Read more »

யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரியின் நிர்வாகத்தால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் கல்லூரி நிர்வாகத்தால் துவிச்சக்கர வண்டிப் பவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பவனியானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி உடுவில் மகளிர் கல்லூரி... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை, காரணம் ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிறேமதாஸ, சந்திரிக, மகிந்தராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது. ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என... Read more »

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (23.03.2023) நடந்துள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண் யார் என்று அடையாளம் காணாத நிலையில், சடலம் மட்டக்களப்பு... Read more »

லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380; ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450; ஒரு கிலோ சம்பா... Read more »

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை எனவும், மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டத்தையும் தாம் நடத்தமுனையவில்லை எனவும் வணக்கத்திற்குரிய சாம் ராஜசூரியர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாயில் இன்று இடம்பெறவிருந்த இறை ஆசீர்வாத நிகழ்வு, இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு... Read more »