பேருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (23.03.2023) நடந்துள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண் யார் என்று அடையாளம் காணாத நிலையில், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews