வடமராட்சியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பொலிசாரால் மீட்பு…!

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் கடந்த  ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த... Read more »

திக்கம் வடிசாலையை தனியாருக்கு அனுமதிக்க முடியாது…!உற்பத்தியாளர்கள்,  இறுதித் தீர்மானம் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்….! 

திக்கம் வடிசாலையை  ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய முழுமையான பணத்தினை  தாம்  வழங்குவதாகவும் பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்... Read more »

அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மாத்தளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடுமையான தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு அரச பாடசாலை ஒன்றின் துணை அதிபரும் மற்றும் அரசும்  200,000 ரூபாய் இழப்பீடு வழங்க... Read more »

கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு – ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச நீண்ட... Read more »

தேர்தல் முறை மாற்றம் எவரின் நலன்களுக்காக? அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழு ஒன்று பரிந்துரைக்கப்படும். அந்தத் தெரிவுக்குழுவினால் அடுத்த வருடம் யூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 8000 இலிருந்து 4000 ஆக... Read more »

கெரோயின் போதை பொருளை ஊசிமூலம் ஏற்றிக் கொண்டிருந்த மூவர் யாழில் கைது,…….!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் கெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நான்கு சந்தேக நபர்கள் இன்றை தினம் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த யாழ் பொலீஸ் நிலைய உப பொலீஸ்... Read more »

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை….! பா.உ விக்கியும் இணைவு.

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை பிரர்பகல் 4:00 மணியளவில்  யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில்... Read more »

எவ்வாறான தடைகள் வந்தாலும் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்க தயாராகும் போராட்டக்காரர்கள்

எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயார் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பில் நேற்று (16.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் ரஷ்மினி விஹங்கா இதனை குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக தொடர்ச்சியாக பல மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நாளை (18.10.2022) முதல் எதிர்வரும் (21.10.2022) ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த  பொதுப் பயன்பாடுகள்... Read more »

மக்களே அவதானம்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை,... Read more »