,இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி 6, மே 19/2024 ஞாயிற்றுக் கிழமை…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟬𝟲 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு – கிழமை_ 🦜*
*_📆  𝟭9 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பணி விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️பரணி : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
கற்பனை சார்ந்த துறைகளில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️ரோகிணி : அனுபவம் வெளிப்படும்.
⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
தாய்வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
குடும்பத்தில் உங்களின் பேச்சுகளுக்கு மதிப்பு மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
⭐️பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : தைரியம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். திடீர் திருப்பம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.

⭐️மகம் : புரிதல் மேம்படும்
⭐️பூரம் : தெளிவு ஏற்படும்.
⭐️உத்திரம் : திருப்பம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் காலதாமதம் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திரம் : சோர்வான நாள்.
⭐️அஸ்தம் : வாதங்கள் நீங்கும்.
⭐️சித்திரை : காலதாமதம் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
தம்பதிகளுக்கு சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️சித்திரை : வாதங்கள் நீங்கும்.
⭐️சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️விசாகம் : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். சிந்தனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️கேட்டை : உற்சாகம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.

⭐️மூலம் : ஆசைகள் நிறைவேறும்.
⭐️பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
⭐️உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
⭐️அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். அலுவலகத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அவிட்டம் : சோர்வான நாள்.
⭐️சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️பூரட்டாதி : விமர்சனங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். சாதனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️பூரட்டாதி : தயக்கம் குறையும்.
⭐️உத்திரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : தாமதங்கள் விலகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews