யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டாமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 336 வது மலர் வெளியீடு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது.

இதில்வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம சேவையாளர் சோ.பரமநாதன் அவர்களும், மதிப்பீட்டுரையினை இளைப்பாறிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ.ஶ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.