யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களு்கு ரூபா 371,000 பெறுமதியான அரிசி வழங்கப்பட்டன.

குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு 7 கிலோவும், இரண்டு பேருக்கு 10 கிலோவும், மூன்று பேருக்கு 12 கிலோவும், நான்கு பேர் கொண்டவர்களுக்கு 15 கிலோவும் மாதாந்தம் இறுதி வெள்ளிக்கிழமைகளில்
பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 5.45 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இறுதி வெள்ளிகிழமையான நேற்றும்135 குடும்பங்களுக்கு
சந்நிதியான்ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதிசெ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கி வைத்தார்