யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையினரால் வாராந்தம் வெள்ளிக் கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வில் நேற்றைய தினம் ஆசிரியர் செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் அவர்களின் மகாபாரத தொடர் சொற்பொழிவு இடம் பெற்றது.


சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் திருகோணமலை உதயபுரி செல்வநாயகபுரத்தில் ரூபா 24 இலட்சம் செலவில் அமைத்துக்கொடுக்கப்பட்ட கற்பக விநாயகர் அறநெறி பாடசாலை, மற்றும் ரூபா 21 இலட்டம் செலவில் அவ்விடத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில்
கட்டடம் அமைக்க உதவியதற்காக அந் நிர்வாகிகள் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகளுக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்ததனர்.
அதேவேளை எதிர்வரும் 05/08/2025 அன்று இடம் பெறவுள்ள குடமுழுக்கிலும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.





இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.