இன்றைய ராசி பலன், ஆடி, 3, சனிக்கிழமை, யூலை 19/2025.

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.

⭐️அஸ்வினி : விவாதங்கள் மறையும்.
⭐️பரணி : அனுசரித்து செல்லவும்.
⭐️கிருத்திகை : பொறுமை காக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.

⭐️கிருத்திகை : சாதகமான நாள்.
⭐️ரோகிணி : எதிர்ப்புகள் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : அனுபவங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் சிலரின் அறிமுகங்கள் அமையும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். யோகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
⭐️திருவாதிரை : அறிமுகங்கள் கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகள் இருந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். பெருமை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : பக்குவம் ஏற்படும்.
⭐️பூசம் : அறிமுகம் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : தடைகளை அடைவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். விட்டுக் கொடுத்து செயல்படுவதன் மூலம் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமித்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : சோர்வுகள் விலகும்.
⭐️பூரம் : மதிப்புகள் உயரும்.
⭐️உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடன் பிறத்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️அஸ்தம் : ஆலோசனை கிடைக்கும்.
⭐️சித்திரை : தடைகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களால் அறிமுகங்கள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் ஆதரவுகள் கிடைக்கும். சினம் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️சித்திரை : தெளிவுகள் பிறக்கும்.
⭐️சுவாதி : அறிமுகங்கள் ஏற்படும்.
⭐️விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
வரவுகளில் இருந்து தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான செயல்களால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : தாமதங்கள் விலகும்.
⭐️அனுஷம் : தீர்ப்புகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தடைப்பட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவல் பணிகளில் கால தாமதம் ஏற்படும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உணவு விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.

⭐️மூலம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️பூராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.
⭐️திருவோணம் : தாமதம் ஏற்படும்.
⭐️அவிட்டம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
மனதளவில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.

⭐️அவிட்டம் : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️சதயம் : எதிர்ப்புகள் விலகும்.
⭐️பூரட்டாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.

⭐️பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
⭐️உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.
⭐️ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews