திக்கம் பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்த்தர் மீது கோடாரி கொத்து..!

வடமராட்சி நெல்லியடி  திக்கம் பகுதியில் குடும்பஸ்த்தர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கோடாரியால் கொத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். சம்பவத்தில் திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் மீதே கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(23) காலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழில் 900 ஆசிரியர்கள் வெளிமாவட்டம் செல்லாமல் குத்தியிருப்பு.. இடமாற்றங்களை நிறுத்த பலர் அரசியல்வாதிகளிடம் படையெடுப்பு

யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 விலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக் கிடைத்துள்ளது. யாழ் வலயம், வலிகாமவலையம் தென்மராட்சி மற்றும் வடமராட்சி வலயங்களிலேயே குறித்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்கள்... Read more »

ராஜபக்ஷக்களின் சொத்துக்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்கள்! –

முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், 14 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால், மறைத்து வைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வெளிவரும் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தனர். இதன்படி, அநாமதேய ஹேக்கர்கள் குழுவினால் ராஜபக்சக்களுக்கு... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி தனுஜாவின் தவறான முடிவா மரணத்திற்க்கு காரணம்….!

யாழ்.பல்கலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் இரண்டாம் வருட மாணவி தனுஜாவின் தவறான முடிவால் மரணமடைந்துள்ளாரா என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் போது தனது உயிரை மாய்திருக்கலாம் எனவும்,  வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணம் வந்த மாணவி தனது அறையை உட்பக்கமாகப்... Read more »

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு….!

ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தி அதிகாரியை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணி இடமாற்றம் அண்மையில்... Read more »

ரம்புக்கணை வன்முறை சம்பவத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நபர் கைது..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸார் பக்கம் நடமாடியதுடன், எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு அரிசி பெற்றுக் கொள்ள முடியும்..! வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்கள் அரிசி பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி இவ்வாறு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது. அதன்படி,... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு... Read more »

யாழ்.காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில் – கூலர் வாகனம் மீது மோதி விபத்து..! கூலர் வாகன சாரதி ஆபத்தான நிலையில்… |

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய புகைரதம் கூலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் அலவ்வா பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ... Read more »

கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பிளேட்டினால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »