பாடசாலைகள் தொடர்பில் உலக வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படும் நிலைமையானது இலங்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படுவது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு பாதக நிலையை உருவாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மனித மூலதனத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மனித மூலதனத்தில் ஏற்படக் கூடிய ஏற்றத்தாழ்வு நிலை நீண்ட கால வளர்ச்சியை மலினப்படுத்தும் என தெரிவித்துள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews