பலர் முன்னிலையில் இளைஞர்களின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்.

களுத்துறை – பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்களைக் கூரிய ஆயுதத்தினால், தாக்கி கைகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு இளைஞரின் கை துண்டாகும் வகையில் வெட்டப்பட்டுள்ளதுடன், மற்றைய நபரின் இடது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு கைகளில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் வீதியில் ஓடிச் சென்று வல்கம மயானத்திற்கு எதிரில் விழுந்துள்ளார். மற்றைய நபர், ஓடிச் சென்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுதலையான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews