யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்.

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் உற்பத்தி கிராமங்களை  சமுர்த்தி இராஜாங் அமைச்சின் செயலாளர் வசந்தகுணரட்ண, அதன் பணிப்பாளர்   நாயகம் நீல் பண்டாரகப் இன்ன அதன் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம M இராம்மூர்த்தி ஆகியோருடன் வல்லிபுரம் கிராமத்திலுள்ள உற்பத்தி கிராமத்தை பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
நாங்கள்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 16  கிராமங்களை உருவாக்கியிருக்கிறோம். மேலும் இரண்டு கிராமங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். அந்தந்த கிராமங்களில் கிடைக்கின்ற மூலவளங்களை பயன்படுத்தி  அந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்து வதற்க்கு   தேவையான சில  உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி, அந்தந்த  கிராமத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கமாக திட்டம்  அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை சார் உற்பத்திப் பொருட்கள், முருங்கை உற்பத்தி பொருட்கள் பற்றிக் உற்பத்திகள் போன்றவைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையிலேயே நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் உயர்ந்த பட்சமாக 10  மில்லியன் ரூபாய்களை  ஒதுக்கி இருக்கின்றோம்.  அவர்களுடைய செயல் திட்டத்திற்கு அமைய அவர்களுக்கு அந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்திலே அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளான சந்தைப்படுத்தல் பிரச்சனை, தொழில்நுட்ப பிரச்சனை,  கையினால் செய்யும் உற்பத்தியை  இயந்திரங்களை பயன்படுத்தி செய்யக்கூடிய நிலைமை போன்றவற்றையும்,  அதே நேரத்திலே தர நிர்ணயத்தை ஏற்படுத்துதல்  போன்ற தொழில்நுட்ப உதவிகளை நாங்கள் வழங்க வேண்டி இருக்கிறது.  வர்த்தக ரீதியில் உற்பத்திகளை மேற்கொள்கின்ற போது அதனுடைய வர்த்தக நாமம் அதனுடைய (brand name) மக்கள் சார்பாக அறிமுகப்படுத்தி அதனையும் உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால் அங்கு பெறுமதி சேர்க்க வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. ஆகவே அங்கு பெறுமதி  சேர்க்க வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.  ஆகவே இவை பற்றி அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, அதே போன்று அவர்களுக்கு தேவையான  அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவையும்மேம்படுத்தப்பட இருக்கின்றன என்றும்,  இந்த உற்பத்தி கிராமத்திற்கு  மேலதிகமாக ஒவ்வொரு கிராமத்திற்கும் மூன்று மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அவை  கிராமங்களுக்கான தேவையான  உட்கட்டுமான வேலைகளுக்காக அவற்றை ஒதுக்கி இருக்கின்றோம்.  அவற்றைச் செயல்படுத்துவது  அந்தந்த உற்பத்தி கிராமத்தின் அங்கத்தவர்களை சாரும்.  ஆகவே இதனை சிறப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில்  சிறப்பாக அமுல்படுத்தி வருகிறார்கள். நேற்றும் இன்றும் நாங்கள் 15 கிராமங்களை பார்வையிட்டு இருக்கிறோம்  என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews