ஆட்சி மாற்றம் மட்டும் நெருக்கடியைத் தீர்க்காது…! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்த ஒன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி இன்று அதி உச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே... Read more »

www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? ஆய்வாளர் நிலாந்தன்..!

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை... Read more »

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்…!../

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி  என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து... Read more »

காணாமல் போனார் விவகாரம்! கூட்டுச் செயற்பாடுகளே தேவை…! சி.அ.யோதிலிங்கம்.

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை... Read more »

தமிழ் அரசியலுக்கு அவசியமானது கத்தியா? வித்தையா? சி.அ.யோதிலிங்கம்.

ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது.  அமைதிக்கான... Read more »

உக்ரைன் போர் தமிழ்த்தரப்பிற்கு பல வெளிகளைத் திறக்கும் சி.அ.யோதிலிங்கம்.

ஜெனிவா திருவிழா ஆரம்பித்து விட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட்             அம்மையார் சற்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மக்கள் பற்றிய விவகாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா திருவிழா இன்று இலங்கைத்தீவின் பொது விழாவாக... Read more »

சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம்…… சி.அ.யோதிலிங்கம்.

சிறீலங்காவின் 74 வது சுதந்திர தினம் கடந்த 4.02.2022  வெள்ளியன்று முப்படைகளின் அணிவகுப்புடன் சிங்கள தேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிங்கள தேசம் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியான தினமாக அனுஸ்டித்த போது தமிழ் மக்கள் கரி நாளாக அனுஸ்டித்தனர். இலங்கைத் தீவு சமூகமளவில் இரண்டாக இருப்பதை சுதந்திரதினம்... Read more »

பொறுப்புக்களை சுமந்துகொண்ட முன்னணி……./சி.அ.யோதிலிங்கம்.

13வது திருத்தத்திற்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் பலத்த அதிர்வலைகளை கிழப்பி விட்டிருக்கின்றது. ஒரு வகையில் தேங்கிப்போயிருந்த தமிழ் அரசியலை ஒரு சூடான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது எனலாம். இரண்டு அரசியல் போக்குகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் 60... Read more »