பொறுப்புக்களை சுமந்துகொண்ட முன்னணி……./சி.அ.யோதிலிங்கம்.

13வது திருத்தத்திற்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
போராட்டம் பலத்த அதிர்வலைகளை கிழப்பி விட்டிருக்கின்றது. ஒரு வகையில்
தேங்கிப்போயிருந்த தமிழ் அரசியலை ஒரு சூடான நிலைக்கு கொண்டுவந்து
விட்டிருக்கின்றது எனலாம். இரண்டு அரசியல் போக்குகள் தெளிவாகத் தெரியத்
தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் 60 வருடங்களாக முன்னெடுத்த தமிழ்த் தேசிய
அரசியலை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பது ஒரு போக்கு.
இரண்டாவது ஏதோ ஒரு வகையில் இணக்க அரசியலுக்கு செல்வது என்பது இன்னோர்
போக்கு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பெரும்பான்மையான புலம்பெயர்
அமைப்புக்களும் முதலாவது போக்கை கடைப்பிடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டாவது போக்கை பிரதிபலிக்கின்றன. இதில்
எந்தப் போக்கு வெற்றிபெறும் என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும்.
இருகட்சிமுறை வெளித் தெரியத் தொடங்கியுள்ளதால் போட்டிபோட்டுக்கொண்டு இரண்டு
அணியினரும் செயற்படத் தொடங்கியுள்ளனர். போராட்டப் பக்கம் அதிகம்
எட்டிப்பார்க்காத சுமந்திரன் குருந்தூர் மலைக்கு செல்கின்றார். வலிவடக்கு
காணிப் பறிப்பை பார்வையிடுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக
கையெழுத்துப் போராட்டம் இடம்பெறுகின்றது.  இன்னோர் பக்கத்தில்
காணிப்பறிப்புக்கு எதிராக செயற்படுவதற்கு அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் அக் கட்சிக்கு கணிசமான
வெற்றியைக் கொடுத்திருக்கிறது. அவர்களது ஆர்ப்பாட்டத்தை “எழுக தமிழ்”
“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போன்ற பேரெழுச்சி எனவும் கூறமுடியாது.
யாழ் பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெறும் அடையாளப் போராட்டம் என்றும்
கூற முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட போராட்டம் எனலாம். ஆர்ப்பாட்டத்திற்கு
முன்னர் இடம் பெற்ற சவப்பெட்டி பிரச்சார ஊர்வலம் குறைந்த ஆட்களுடன்
இடம்பெற்றாலும் வலிமையான கவனிப்பை பெற்றிருந்தது. மொத்தத்தில் 13 வது திருத்தத்தை பேசுபொருளாக்குவதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வெற்றி
பெற்றிருக்கிறது என்றே கூறலாம்.  மணிவண்ணன் விவகாரத்தில் சற்று
விழுந்திருந்த கட்சியைப் இப்போராட்டம் தூக்கி நிமிர்த்தியிருக்கிறது.
முன்னணிக்கு கணிசமானளவு வெற்றி கிடைத்திருந்தாலும் பாரிய தொடர்
பொறுப்புக்களையும் சுமத்தியிருக்கிறது.  தொடர் போராட்டத்தை முன்னெடுக்க
வேண்டிய பொறுப்பே அது. இது ஒரு வகையில் புலி வாலைப் பிடித்த கதை தான். ஓடவும்
முடியாது விடவும் முடியாது. முன்னணி ஏனைய மாவட்டங்களுக்கும் போராட்டத்தை
விஸ்தரிக்கப்பபோவதாக் கூறியுள்ளது. அடுத்த போராட்டத்தை வவுனியாவில் நடத்த
இருப்பதாகவும் கதைகள் அடிபட்டிருந்தன. ஆனால் அதற்கான தயாரிப்புக்கள் எதுவும்
நடப்பதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது போன்ற போராட்டத்தை வவுனியாவில்
நடாத்துவது என்றால் குறைந்தபட்சம் ஒரு மாத உழைப்புத்தேவை. அதற்கான ஆளணி
வன்னியில் அவர்களுக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஏனைய மாவட்டங்களில்
நடாத்துவது என்றாலும் இது தான் நிலை. முன்னணி வடக்கு – கிழக்கு முகத்தையோ அல்லது
குறைந்தபட்சம் வடக்கு முகத்தையோ இன்னமும் கட்டியெழுப்பவில்லை. அதற்கு யாழ்ப்பாண
முகம் மட்டுமே உண்டு. மணிவண்ணனின் வெளியேற்றத்தால் அதுவும் பலவீனமான
நிலையிலேயே உள்ளது.  முன்னணி தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் இரண்டு நெருக்கடிகளை வெற்றி கண்டாக வேண்டும். ஒன்று கட்சியின் கட்டமைப்பை அது வளர்த்தெடுக்க வேண்டும்.
கிராமங்கள் தோறும் பிரதேச செயலர் பிரிவுகள் தோறும் கிளைகளை அது
உருவாக்க வேண்டும். பெண்கள் அமைப்புக்கள்ரூபவ் மாணவர் அமைப்புக்கள் தொழிலாளர்
அமைப்புக்கள் என முன்னணி அமைப்புக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். பிரதேச
ரீதியாக தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு கட்சியோரூபவ் தலைமையோ தயார்
நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது ஒரு அரசியல் கட்சி என்ற
நிலைக்கு கூட முன்னணி இன்னமும் வளரவில்லை. தேர்தலில் போட்டியிடும் ஒரு குழுவாக
மட்டுமே அது இருக்கின்றது. அது நினைக்கும் தேசிய அரசியல் இயக்கமாக வளர்வதற்கு
அது நீண்ட தூரம் செல்ல வேண்டும் தமிழ் நாட்டில் திராவிட
முன்னேற்றக்கழகத்திற்கு பட்டி தொட்டியெங்கும் கிளைகள் இருக்கின்றது. மாவட்ட
அமைப்பாளர்கள் அங்கு குறுநில மன்னர்கள் போலவே விளங்குகின்றனர். மறு
பக்கத்தில் தேர்தல் கட்சி ஒன்று தேசிய இயக்கமாக மிளிர்வதற்கு சாத்தியங்களும்
குறைவு இரண்டாவது குறைந்த பட்சம் தமது கொள்கைகளோடு உடன்படக்கூடிய பொது
அமைப்புக்கள் தனி நபர்களோடு உறவுகளைப் பேண வேண்டும். அவர்களையும்
போராட்டங்களோடு அரசியல் செயல்பாடுகளோடு இணைக்க வேண்டும். பொது
அமைப்புக்கள் கொள்கை உடன்பாடுடைய தனிநபர்கள் கட்சி அடையாளம் முதுகில்
குத்தப்படுவதை விரும்பமாட்டா. கொள்கை உடன்பாடுடைய பல அமைப்புக்களும்
தனிநபர்களும் இவர்களது போராட்டத்தோடு இணையாமைக்கு இதுவே காரணமாகும்.
தற்போது தமிழ் மக்களுக்கு தேவையானது அடையாளப் போராட்டங்களோரூபவ்
இடைநிலைப் போராட்டங்களோ அல்ல மாறாக உலகின் கவனத்தை திருப்பக் கூடிய
பேரெழுச்சிகளே! பொது அமைப்புக்கள் தலைமையில் அரசியல் கட்சிகளையும் இணைத்துக்
கொண்டு செயற்படும் போதே பெரெழுச்சியை உருவாக்க முடியும். கட்சிகளால்
தனித்தோ அல்லது பொது அமைப்புக்களால் தனித்தோ பேரெழுச்சிகளை உருவாக்க
முடியாது. “எழுக தமிழ்”இ “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டங்கள்
பேரெழுச்சியாக இருந்தமைக்கு காரணம் பொது அமைப்புக்களின் தலைமையில்
அரசியல் கட்சிகளும் இணைந்து கொண்ட போராட்டமாக அவை இருந்தமையே ஆகும்.

13வது திருத்தம் இரண்டு விடயங்களை உள்ளடக்கியது. ஒன்று 13வது திருத்தத்தின்
உள்ளடக்கம். இரண்டாவது இந்தியத் தலையீட்டிற்கு வழி ஏற்படுத்துதல். உள்ளடக்கம்
தொடர்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடிய எதுவும் அதில் இல்லை
என்பதை நிரூவிப்பதில் முன்னணி வெற்றி கண்டிருக்கிறது . இதில் கூட்டமைப்பின்
கட்சிகளும்ரூபவ் விக்கினேஸ்வரன்ரூபவ் சிறீகாந்தாவின் கட்சிகளும் படு தோல்விகளையே
அடைந்திருக்கின்றன.

அவை உள்ளடக்கத்தை விட இந்தியத் தலையீடு பற்றி உரக்கக்
கூறியிருந்தால் கணிசமான வெற்றி கிடைத்திருக்கும். விக்கினேஸ்வரன் சிங்களக்
குடியேற்றங்களைத் தடுக்கலாம் எனக் கூறியுள்ளார்.  அவர் வடமாகாண முதலமைச்சராக
இருந்தபோது வவுனியா வடக்கு குடியேற்றங்களை அவரால் தடுக்க முடியவில்லை. வவுனியா
வடக்கில் குடியேறிய சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு காணிப் பத்திரம் வழங்கிய
நிகழ்வையும் தடுக்க முடியவில்லை. சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் காணிப்
பத்திரம் வழங்கிய நிகழ்சில் சிறப்பு விருந்திரனர்களாகக் கலந்துகொண்டமையே
இடம்பெற்றது. முன்னணி 13 வது திருத்தத்தை முழுமையாக நிராகரித்து சுயநிர்ணயமுடைய
சமஸ்டியையே தீர்வாக முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை அடைவதற்கான வழி வரைபடம்
பற்றி எதுவும் கூறவில்லை.
நண்பன் நிலாந்தன் கூறுவது போல தேசிய இனப் பிரச்சினை என்பது ஒரு
அனைத்துலகப் பிரச்சினை தான். அதனை வெற்றி கொள்வதற்கு உலகு தழுவிய தரிசனங்களும்ரூபவ் வேலைத்திட்டங்களும் தேவை. முன்னணியிடம் இவை தொடர்பாக ஏதாவது
அமைப்புக்கள் இருக்கின்றதா? ஏதாவது வேலைத்திட்டங்கள் இருக்கின்றதா? மக்கள்
புரிந்துகொள்ளக் கூடிய வழி வரைபடம் இல்லாமல் மக்களின் ஆதரவினை எதிர்பார்க்க
முடியாது.
முன்னணியினர் தொடர்பாக முன்வைக்கப்படும் இன்னோர் குற்றச்சாட்டு இந்தியத்
தலையீட்டுக்கான வழிகளை முன்னணி அடைந்திருக்கின்றது என்பதுதான்  13வது திருத்தம்
இந்தியா இலங்கையில் தலையிடுவதற்கான ஒரு கொழுக்கி. அதனை முன்னணி
பலவீனப்படுத்துகின்றது என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. மனோ கணேசன் இந்தக்
குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றார். அவர் முன்னணி மீது மட்டுமல்ல
தமிழரசுக் கட்சி மீதும் முன்வைக்கின்றார். அரசாங்கத்தை சந்திக்கு இழுக்கும்
வாய்ப்பை இவர்கள் குழப்பிவிட்டனர் என்று ஆதங்கப்படுகின்றார். தமிழரசுக் கட்சி
13வது திருத்தத்துடன் மட்டும் நிற்காமல் சமஸ்டியையும் இணைத்தமையால் தான் அக் கட்சி
மீதும் பாய்ந்து விழுகின்றார். தமிழ் பேசும் மக்களின் விவகாரமாக வளர்க்க
வேண்டிய ஒன்றை தமிழ் மக்களின் விவகாரமாக சுருக்கிவிட்டனர் என
கோபப்படுகின்றார். இதற்கூடாக தமிழ் முற்போக்கு முன்னணி
கையொப்பமிடாமைக்கான காரணத்தையும் நியாயப்படுத்துகின்றார். இந்தக்
குற்றச்சாட்டுகளுக்கு முன்னணி பெரியளவிற்கு பதில்களை முன்வைக்கவில்லை.
இந்தியத் தலையீட்டிற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தமோ 13வது திருத்தமோ
அவசியமில்லை. இவை எவையும் இல்லாமலேயே 1983 யூலையில் நரசிம்மராவ்
தலையிட்டார். 1983 நவம்பரில் ஜீ.பார்த்தசாரதி தலையிட்டார் 1985 ரொமேஸ்
பண்டாரி தலையிட்டார் 1986ல் சிதம்பரம் தலையிட்டார். ஏன் நேபாளத்தில்
இந்திய மரபுகளைக் கொண்ட மாதாசி இனத்தவர்களுக்கு பரிகார நீதி வேண்டும் எனக்
கூறி தலையிட்டது.
ரவூப்கக்கீம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய ஆவணத்தில்
கையொப்பமிடாமைக்கு நியாயங்கள் இருக்கின்றன. வடக்கு-கிழக்கு இணைப்பை
முஸ்லீம்கள் ஏற்கவில்லை ஆனால் மனோகணேசன கையொப்பமிடாமைக்கு எந்த
நியாயங்களும் இல்லை. முன்னால் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர்
திலகராஜ் உட்பட பல மலையக் தலைவர்கள்  கையொப்பமிடாமையை கண்டித்திருக்கின்றனா்.
இந்த விவகாரத்தில் தொண்டமான் சந்திரசேகரன் மரபை மனோகணேசன்
பின்பற்றவில்லை என்ற நியாயமான விமர்சனங்களும் உண்டு. தொண்டமானும்
சந்திரசேகரனும் மலையக மக்களின் அரசியல் அடையாளம் வேறாக இருந்த போதும் சக தேசிய இனம் என்ற வகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல்
நிலைப்பாடுகளை ஆதரித்திருந்தனர். அது தங்களுடைய கொள்கை என்றும்
கூறியிருந்தனர். தொண்டமான் பிரபாகரனை சுபாஸ் சந்திரபோசுடன் ஒப்பிட்டுப்
பேசியிருந்தார். சந்திரசேகரன் தங்களது இயல் அளவிற்கு மேலாக ஒத்துழைப்பு
வழங்கியதால் சிறைவாசமும் அனுபவித்தார்.
தமிழ்த் தரப்பும் வரலாற்று ரீதியாக மலையக மக்களின் அரசியல்
நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கத் தவறவில்லை. தமிழரசுக் கட்சி தனது
மாநாடுகளில் மலையக மக்கள் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்ற தவறியதில்லை.
திம்பு கோரிக்கைகளில் நான்காவது கோரிக்கை மலையக மக்கள் பற்றியதாகும்.
பரஸ்பரம் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்காமல் வடக்கு-கிழக்கு
தமிழர் மலையகத்தமிழர் உறவைக் கட்டியெழுப்ப முடியாது.
மொத்தத்தில் தமிழத் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிர்காலம் வலுவான
சோதனைக் காலம் தான்.

Recommended For You

About the Author: Editor Elukainews