கோட்டா கோ கம பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் முறுகல்: நால்வருக்கு காயம் –

கோட்டா கோ கம பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு 15, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15, 17 மற்றம் 20 வயதுகளையுடைய இளைஞர்கள் நால்வரே காயமடைந்த... Read more »

யாழ்ப்பாண குடாநாட்டிற்கு லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவும்  லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது. இதேநேரம் இன்றைய தினம் ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படும் நிலையில் நாளை மறுதினம் 2 ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதோடு எதிர்வரும் வாரமும் அதிக சிலிண்டர்கள் எடுத்து... Read more »

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் –

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போ​ரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீதியுள்ளார். அ​த்துடன் நீர்த்தாரை பிரயோகத்தையும் ​மேற்கொண்டுள்ளனர். Read more »

மேல் மாகாணத்தில் ஊரடங்கு! நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் –

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும்... Read more »

கோட்டபாய ராஜபக்ஜ மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் வெளியேறினார்.

அதிகாரங்கள், சட்டங்களுக்கு உட்பட்டு விமானம் வழங்கப்பட்டது: விமானப்படை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் இன்று (13) அதிகாலை நாட்டை விட்டுச் சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக ... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்ப்பட்ட 15 பேர் கைது….!

மட்டக்களப்பு மவட்டம் களுவாஞ்சிக் குடியில் வெளி நாட்டுக்குச் செல்ல தயாரான 15 பேர்  விஷேட அதிரடி படையினரால் நேற்று 12/07 கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமராட்சி பருத்தித்துறை இன்பசிடி, அல்வாய் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். Read more »

அமைச்சரவை கூடததால் பொருளாதாரம் முடங்கும் நிலை –

அமைச்சரவை கூடாத காரணத்தினால் எரிபொருள் உள்ளிட்ட அவசரகால கொள்வனவுகளுக்கு பணத்தை ஒதுக்க முடியாமல் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை (11) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி பங்கேற்காத காரணத்தினால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சித்... Read more »

பசில் ராஜபக்சவும் இலங்கையிலிருந்து வெளியேறினார் –

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மக்கள்... Read more »

இலங்கை வரலாற்றில் பதவிக்காலம் முடிவதற்குள் தப்பி ஓடிய முதலாவது ஜனாதிபதி…..!

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஜ  இன்றைய தினம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார். அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்குள்  பதவியில் இருந்து விலகும் முதலாவது  ஜனாதிபதியாகவும் இடம் பிடித்துள்ளார்.... Read more »

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்வு..!

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் பாண் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. Read more »