முல்லைத்தீவில் வர்த்தக நிலையம் மீது மின்னல் தாக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள வர்த்தக நிலையம் மீது மின்னல் தாக்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தக... Read more »

இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

தொடர் மழையினால் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

கட்டைக்காட்டில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது….!

(முள்ளியான் நிருபர்) காற்றுடன் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக  பெய்து வருகின்ற பலத்த மழையால் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியான் பகுதியில்  சில குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கைக் குழந்தைகளுடன் வசித்து வரும் சில குடும்பங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். Read more »

முல்லைதீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்…..!

சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-09.30 மணியளவில் முல்லைத்தீவு நகரத்தில் கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது. ஊடகவியலாளர் மீதான இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான சித்திரவதையை முல்லைத்தீவு ஊடக அமையம்... Read more »

இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன..! |

யாழ்.வடமராட்சியில் இரு இடங்களில் இருவருடைய சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றது.  யாழ்.வடமராட்சி – மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்பகுதிகளிலேயே இவ்வாறு சடலங்கள் நேற்று கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும் அவை இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. Read more »

தடைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்களை தாண்டி யாழ்.பல்கலைகழகத்தில் 6.5க்கு மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஒளிர்ந்தது..!

யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று மாலை 6.5 மணிக்கு ஈகை சுடரேற்றி நடைபெற்றிருக்கின்றது. மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகை... Read more »

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றம்..! பதற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நடந்தேறியது..

யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. பெருமளவில் ஆயுதங்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்... Read more »

மாமனிதர் ரவிராஜ் வீட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்ற நிலையில் வீட்டை முற்றுகையிட்ட இராணுவம்..!

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச... Read more »

மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் அஞ்சலி செலுத்தினார்….!

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாவீர் நாளான நேற்று பிரத்தியோக இடமொன்றில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். Read more »

யாழ்.வல்வெட்டித்துறை – தீருவிலில் ஈகை சுடர்களை தட்டி விழுத்தி, மக்களை தடுத்து பாதுகாப்பு தரப்பு அடாவடி..! திட்டமிட்டபடி நினைவேந்தல் நடந்தது…!

வல்வெட்டித்துறை – தீருவில் பாதுகாப்பு பிரிவினரின் கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவேந்தலுக்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில்... Read more »