மாமனிதர் ரவிராஜ் வீட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்ற நிலையில் வீட்டை முற்றுகையிட்ட இராணுவம்..!

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார். இதனையடுத்து இராணுவத்தினர், பொலிஸார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்களும்

ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews