நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமுலாகும் சாத்தியம்..! நாளை உயர்மட்ட கூட்டத்தில் ஆய்வு.. |

நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளதுடன், தொற்றாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முடக்கத்திற்கு செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக... Read more »

மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்த கோரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி... Read more »

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் வைரஸ்! ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்.

ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

தற்போதுள்ள நிலைமையில் பெப்ரவரி இறுதிக்குள் “ஒமிக்ரோன்” திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்..!

நாடு முழுவதும் பெப்ரவரி மாத இறுக்குள் “ஒமிக்ரோன்” வைரஸ் பரவல் தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.  நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன்... Read more »

உலக நாடுகளுக்கு ஆபத்தாக மாறிவரும் பயங்கர உயிர்க்கொல்லி ‘நியோகோவ்’ வைரஸ்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ்... Read more »

ஜனவரி 31 முதல் பெப்ரவரி 5 வரை மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரம்! –

கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரமாக ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

கரவெட்டி பகுதியில் ஒருவர் இறந்தமைக்கு நெல்லியடி தனியார் வைத்தியசாலை காரணமா? வெளியாகிய திடுக்கிடும் தகவல்……!

யார்க்கரு பிள்ளையார் கோயிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியை சேர்ந்த 60 வயதுடைய  குலவீரசிங்கம் மனோன்மணி என்பவர்  இன்றைய தினம்  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது குறித்த  மரணமடைந்த பெண்மணி  கடந்த மாதம் சுகயீனம் காரணமாக நெல்லியடி... Read more »

வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை..! யாழ்.மாவட்டத்தில் ஆரம்பம், சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் வீட்டு பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படும். என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கே.நந்தகுமாரன் நியமனம்! –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »