கரவெட்டி பகுதியில் ஒருவர் இறந்தமைக்கு நெல்லியடி தனியார் வைத்தியசாலை காரணமா? வெளியாகிய திடுக்கிடும் தகவல்……!

யார்க்கரு பிள்ளையார் கோயிலடி
கரவெட்டி கிழக்கு, கரவெட்டியை
சேர்ந்த 60 வயதுடைய  குலவீரசிங்கம் மனோன்மணி என்பவர்  இன்றைய தினம்  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது
குறித்த  மரணமடைந்த பெண்மணி  கடந்த மாதம் சுகயீனம் காரணமாக நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
 அவரை பரிசோதித்த வைத்தியர் வையிற்றில் கட்டி உள்ளதாகவும், அதனை சத்திரசிகிச்சை மூலம்  அகற்ற  வேண்டும் எனவும் தெரிவித்து சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதன் பின்னர் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபரின் சடலம்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு  சட்டமருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
 அவரின் வயிற்றுப் பகுதியில் 50 சென்ரிமீற்ரர் நீளமும், 10 சென்ரி மீற்றர் அகலமும் உள்ள துணி ஒன்று உள்ளே காணப்பட்டுள்ளது.
இதனால் சில வாரங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக இருக்கலாம் என பொலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள்  மூலம் தெரியவந்துள்ளது.
 குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் இன்று மதியம் ஒப்படைக்கப்பட்டு சடலத்தை பதைக்கும் படி அறிவுறுத்தப்பட்ட நிலையில் , பின்னர் நீதிபதி பார்வையிடும் வரை இறுதிக் கிரியையை தாமதமாக்குமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சற்று முன்னர் நீதிபதி உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு சடலத்தை புதைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்
 

Recommended For You

About the Author: Editor Elukainews