யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கே.நந்தகுமாரன் நியமனம்! –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன் வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews