உலக நாடுகளுக்கு ஆபத்தாக மாறிவரும் பயங்கர உயிர்க்கொல்லி ‘நியோகோவ்’ வைரஸ்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கோவிட் வைரஸ் அல்ல. திரிபு அல்லது வௌவாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ் குறித்த முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர் அதன் பாதிப்பு குறித்து தகவலகள் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews