இலங்கையிலிருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று(22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து 141 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.... Read more »

இலங்கை சரியான பாதையில் பயணிக்கவில்லை:அமெரிக்க குற்றச்சாட்டு

இலங்கை சரியான பாதையில் பயணிக்கவில்லை என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிளின்கன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி குறித்த அமெரிக்க செயலணியின் பிதானி சமந்தா பவர் ஆகியோரிடம்... Read more »

சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்புக்கான முயற்சியில் இலங்கை….!

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்காக இலங்கை அரசாங்கம் பாரிய முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை சீரமைப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீன கப்பலை அம்பாந்தோட்டைக்குள் அனுமதிக்கும் முடிவை இலங்கை எடுத்திருந்தது.... Read more »

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு விவசாயிகள் போராட்டம்….!

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று... Read more »

ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல்.!

கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது. ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டை ரயில்... Read more »

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்பு

மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 250 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.... Read more »

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டொப் வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 25, 42, 43, 49 வயதுகளையுடைய நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே... Read more »

இரு குழுக்களுக்கு இடையிலான முறுகலில் ஒருவர் படுகொலை

குருணாகல் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரவத்த பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் முறுகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகொல்லாகொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில்... Read more »

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை அரலங்கவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹஓயா 5ஆம் வீட்டுத்திட்ட பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று அரலங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரவில பிரதேசத்தை சேர்ந்த 57 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபரை அரலங்கவில வைத்தியசாலையில்... Read more »

ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

அம்பலாங்கொட, தெல்துவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர். ஹோட்டலில் மது அருந்திக்கொண்டிருந்த நால்வரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஏனைய மூவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலும் ஒருவர்... Read more »