சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு விவசாயிகள் போராட்டம்….!

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுத்தருமாறு தெரிவித்தே விவசாயிகள் இவ்வாறு  கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு சென்றிருந்த  கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சிறிமோகன் விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்புடன் பேசி விரைவான நடவடிக்கை எடுப்பதாக அவர் விவிசாயிகளிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த சந்திப்பில், அறுவடைக்கு தேவையான டீசல் கிடைக்காதவிடத்து, தாம் காலபோக செய்கையை மேற்கொள்ளப்புாவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன்
சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலயைில், தேவையான டீசல் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக மாவட்டத்திற்கு டீசல் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலயைில் விவசாய செய்கைகளை கால்நடைகள் சேதமாக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த அறுவடையை விரைவாக மேற்கொ்ளள வேண்டும். அதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபோக செய்கையை முழுமையாக நிறைவு செய்ய முடியாக எமது விவசாயிகள், காலபோக செய்கை தொடர்பில் பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin