உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க காத்திருப்பர்களுக்கான அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் என... Read more »

மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கு உதவும் வகையிலான திட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தை இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 077 5 687 387 என்ற இலக்கத்தின் ஊடாக மின்சாரக்... Read more »

பருத்தித்துறையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்தவரும், வாங்கியவரும் பொலிசாரால் கைது….!(வீடியோ)

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லீட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும்,  அதனை வாங்கிய நபரும், பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் இன்று புதன்கிழமை  பிற்பகல்  மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறுவதாக பருத்திதுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு... Read more »

சிறிலங்கா மீது மீண்டும் பிரேரணை – குற்றவாளியாக ரணில்..! ஐ.நாவில் காத்திருக்கும் ஆபத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது வரக்கூடிய தீர்மானத்தில், ஒரு முக்கிய விடயமாக பொருளாதார குற்றங்கள் உள்ளடக்கப்படலாம் என தாம் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று (14) செய்தியாளர்களுக்கு வழங்கிய... Read more »

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு !

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது. பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக... Read more »

பலவந்தமாக காரில் கடத்தி செல்லப்பட்ட பெண்: சந்தேகநபர்கள் இருவர் கைது

மாத்தறை-திக்வெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பத்தேகம நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை திக்வெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்குச் சென்றபோது, ​​காரில் வந்த இரு சந்தேகநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக வீதியின்... Read more »

இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்

அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “இதுவொரு தற்காலிக தடை.... Read more »

உலக வங்கியிடம் மீண்டும் உதவி பெற முடியாத நிலை ஏற்படும்! முதித பீரிஸ் எச்சரிக்கை

வெறும் 25 நாட்களுக்குள் நாட்டில் காணப்பட்ட சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாங்கள் மிகவும் சரியான முறையிலும் ஒரு ஒழுங்கு முறையுடனும் செயற்பட்டதன்... Read more »

ரணில் தலைமையில் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடல்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

வெளியானது முக்கிய சுற்றறிக்கை! வீட்டிற்குச் செல்லப்போகும் இரு மடங்கு அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை... Read more »