வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..!  49 மரணங்கள் பதிவு.. | 

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது, 49 மரணங்கள் பதிவு.. வடமாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3049 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 49 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.... Read more »

யாழ்.மாதகலில் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தும் கடற்படையினர் அச்சுறுத்தல்!

யாழ்.குசுமந்துறை பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் மாலை மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்த கடற்படையினர் காணி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த தகவலை அப்பகுதி மக்கள் கூறியுள்ளதுடன், கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடு... Read more »

சிறுவர் பாதுகாப்பு குழுவுக்கான  விசேட பயிற்சிப்பட்டறை….!

(மாந்தை நிருபர்) றகமா நிறுவனத்தினரால் சிறுவர் சமூகத்தினை நிலைத்த மனித வளம் மிக்க சமூதாயமாக உருவாக்கும் நோக்குடன் சிறுவர் வளம், சமூதாயத்தின் பண்புகளை சிறந்த முறையில் மாற்றி அமைப்பது,  அவர்களின் ஆற்றல்கள், விசேட திறமைகளை இனங்கண்டு அதற்கு பொருத்தமான களங்களை ஏற்படுத்தி கொடுத்தல்,  கிடைக்கப்பெற்ற வளங்களைக்... Read more »

புறப் பிரச்சினைகளைக் கையாள்வது போல அகப் பிரச்சினையைக் கையாளக் கூடாது. சி.அ.யோதிலிங்கம்.

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி தற்போது அந்த தினம் கடந்துள்ளதால் ஓய்வுநிலைக்கு வந்துள்ளது. அவர்கள் குறித்த தினத்தில் பெரியளவிற்கு நினைவுகூரல் நடந்ததாகவும் தெரியவில்லை. குறித்த தினத்தை ஒட்டிய வாரம் மாவீரர் நினைவுவாரமாக... Read more »

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம்…../ திருமதி கருணாவதி பத்தமநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்க பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்தமநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வலசெய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

வடமராட்சி அல்வாய் வடக்கில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர முதல்வர் உதவி……!

(நெல்லியடி நிருபர்) தற்போது பெய்துவரும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட அல்வாய் வடக்கு கிராம மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அல்வாய் வடக்கு மகாத்மா வீதியிலுள்ள கடும் மழையால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம்... Read more »

யாழ்.பல்கலைகழக பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர் தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பம்.. |

யாழ்.பல்கலைகழக – பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான 2ம் கட்ட கட்டிட நிர்மாண பணிகள் தொடங்கப்படவுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின்... Read more »

யாழ்.குடாநாடு மற்றும் குடாநாட்டின் அருகில் உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளமா? |

யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது. மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் யாழ்ப்பாணம் குடாநாட்டை அண்மித்துள்ள காவிரிப் படுக்கையில்... Read more »

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் செவிப்பறை பாதிப்பு! விசாரணைகள் ஆரம்பம்.. |

யாழ்.காரைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் தாக்கியதில் க.பொ.த சாதாரண தர மாணவனின் ஒருபக்க காதில் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காரைநகர் – இந்துக்கல்லுாரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி... Read more »

நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் புதிய நடைமுறை…….!

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், கூட்டங்கள், தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதலை பதில் சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.  புதிய நடைமுறைகள்  இன்று தொடக்கம் 15ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டங்கள் நடத்த... Read more »