விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பதவி இழந்தார்..!

விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாக கருதப்படும் தங்கத்தை தேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத் தொகையொன்றை இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்த அமைச்சரவை அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த செயலாளர்கள் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பொது பாதுகாப்பு அமைச்சரின் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews